Friday, December 14, 2007

இவள் கதை தொடரும்.....

றைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்த பாமாவின் கண்கள் கலங்கியிருந்தன. தனக்குள்ளே இருக்கும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த அந்த கண்ணீரால் மட்டும்தான் முடியும் என அவளுக்கு தெரியும். தனது உயிரை நீத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

இரண்டு முறை தற்கொலை முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவள் பாமா. திருமணத்திற்கு முன் தனது காதலை அடையமுடியாமலும் தன் தந்தையின் பிடிவாத்திற்கு ஏற்ப திருமணத்தை ஏற்றுக் கொண்டவள். பதினேழு வயதில் தன்காதலை வெளிப்டுத்திய பின்னரும் தந்தை தன்னை தற்கொலை செய்து கொள்ளுவேன் என வெருட்டியதாலும் வேறு வழியின்றி வெளிநாட்டு சம்பந்த்ததை ஏற்றுகொண்டு வாழ்கின்றாள். தனது கணவன் விமல் தன்னைவிட பதினைந்து வருடங்கள் மூத்தவர் என்பதை தெரிந்து தன்னை போக்கிக் கொண்டாள் தான் இதற்கு ஒரு முடிவாகும் என நினைத்து விஷம் அருந்தி பின் தற்செயலாக காப்பாற்றப்பட்டவள். தனியாக வொளிநாடு வந்த அவளுக்கு ஆறுதாலாக பேசிப்பழக அவளின் கூடப்பிற்ந்த அண்ணண், அண்ணியை விட வோறு எவரும் இருக்கவில்லை. வெறுப்புடன் கனடா வந்த அவளுக்கு கணவனே துணை என நம்பியிருந்தாள். தன்வாழ்வில் கற்பனையோடு வாழ்ந்த பள்ளிப் பருவங்களில் தனது கணவன் எப்படி எல்லாம் வரவேண்டும் என ரமணிச்சந்திரனின் கதைகளை வாசித்து கற்பனையில் வாழ்ந்த அவளுக்கு இதுவோர் போரிடியாக அமைந்தது. அந்த வாழ்கையின் கனவைவிட்டு நியத்தில கணவனுடன் விருப்பு வெறுப்புக்களுடன் வாழ்ந்து மூன்று ஆண்பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வருகின்றாள்.

திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நித்தம் கணவனின் சந்தேகங்களும் சண்டைகளும் அவளின் மனதில் ஓர் மனஅழுத்தமாகவே பதித்துவிட்டது. இப்போது அவள் வாழ்வது எல்லாம் தன் தாய்கும் தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே. பாமா பொறுமையேடும், பொறுப்புணர்வோடும் நடந்து கொண்டிருக்காவிடில் என்றோ அந்த குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்கும். இவ்வாறு அவள் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். பக்கத்திலிருந்த கைத்தொலைபோசி அவளை அழைத்தது. “அம்மா.. இன்னும் வந்து எங்களை ஏத்தலையா..பள்ளிக்கூடம் முடிந்து வெளியால் Wait பண்ணுறம்…” பிள்ளையின் அழைப்பைக் கேட்டவுடன் அவள் தீடீரென தன்னை நிலைப்படுத்திக்கொண்டு காரில் பிள்ளைகளை ஏற்ற செனறாள். வாகனம் ஓட்டும் போதெல்லாம் தன்னை விபத்தில் மாட்டிக்கொண்டு சாகடிக்க வேண்டும் எனவே நினைத்துக் கொள்வதும் உண்டு. எத்தனையோ நாட்கள் அழுதபடியே காரை ஓட்டிச் சென்றிருக்கிறாள். அவள் வாழ்வில் நடந்த விடயங்களை அவள் அசைபோடும் போதெல்லாம் நான் ஏன் இன்னும் உயிருடன் வாழ்கின்றேன் எனத்தான் நினைப்பதும் உண்டு. இவ்வாறு நினைக்கும் போதெல்லாம் தன்னை தற்கொலை செய்து கொள்வதே வழி என நினைத்தது ஏதாவது செய்து கொள்வாள்.

திருமணம் நடந்து கொஞ்ச நாட்களில் ஒரு முறை தன்கையில் கத்தியால் வெட்டிக் கொண்டதும் உண்டு. கணவன் தனது நண்பர்களுடன் வெளியால் சென்று சந்தோஷமாக இருந்து தண்ணி, கூத்து என முடித்தது வீட்டிற்கு வரும்வரை சமைத்தது விட்டு கணவனுக்கா காத்திருப்பாள். கணவனுக்கு தான் ஆசையாக சமைத்வற்றை சாப்பிடுவதில்லை என்ற ஆத்திரத்தினால்தான் அவள் ஒருமுறை தன் கையை வெட்டிக் கொண்டவள். “நான் அவரை நம்பித்தனே கனடா வந்தனான்…..வேறு யாரு இருக்கினம் எனக்கு….அவரும் என்னில் அன்பு வைக்காட்டி….நான் ஏன் இப்படி இருந்து…” என நினைத்து பல நாட்கள் கலங்கியிருக்கிறாள். இதனைவிட பல கேவலமான விடயங்கள் தனக்கும் கணவனுக்கும் இடையில் நடந்ததை வெளியால் சொல்முடியாது தவித்து கொண்டிருந்தாள். தனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆறதல் தன் தாய் மட்டுமே, ஆனால் தன்தாய்க்கு தன்னைப்பற்றிய விடயங்களை சொல்லி தாயின் ஆயுளை குறைத்துவிடுமோ என பலவிடயங்களை சொல்வதில்லை. பாமாவிற்கு தன்தாயை பிடித்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அவள் சிறுவயதில் இருந்து தன் தாயைவிட்டு பிரிந்து வாழ்ந்தவள். அவள் தனது வீட்டில் செல்லப்பிள்ளை வேறு. மூன்று ஆண் சகோதரர்களுடன் பிறந்து வாழ்ந்தவள். பாமா, கவர்ச்சியான பெண் வேறு. ஒரு தடைவ பார்த்த அவளை மறுதடவை பார்க்க வைக்கத்தூண்டும் கவர்ச்சி அவளிடம் நிறையவே இருந்தது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. இவளை கோவில் திருவிழாக்களில் பல ஆடவர்கள் பின்தொடர்ந்து போய் செருப்பினால் அடிவாங்கியும் உள்ளனர். இவளுக்கு கொடுத்துவிட்ட பூவை திருப்பி காதில் வைக்கும் படி திருப்பிக் கொடுத்தும் இருக்கிறாள். அவளிடம் ஆடவர்கள் மனதை பறி கொடுத்ததில் தவறே இல்லை. அவ்வளவு அழகான பெண்.

இவ்வாறெல்லாம் தனது குறும்புத்தனங்களைத் தனது இளம் வயதினில் பாடசாலை நாட்களில், கோவில் திருவிழாக்களில் என செய்தவள். இவ்வாறெல்லாம் செய்த பாமாவிற்கு இப்போதை வாழ்க்கையை நினைத்துப்பார்த்து கவலை கொள்வதுண்டு. தனக்கு காதல் கடிதம் தந்க சகமாணவார்களைக் திருமணம் செய்திருந்தால் சிலவேளைகளில் நன்றாக வாழ்ந்திருப்பேன் என நினைத்துக் கொள்வாள். தான் வாழ்கின்ற இந்த வாழ்க்கை என்பது தான் தன்கனவுகளை விட்டு வாழ்வதுபோன்றே கருதினால். தான் அந்த சகமாணவருக்கும், வாலிபருக்கும் செய்த பாவங்களுக்கும் குறும்புகளுக்கும் எல்லாம் சேர்த்துத்தான் இப்ப அனுபவிக்கின்றேனோ எனவும் நினைத்துக் கொள்வாள். தனது தாயிடம் பேசும் போதெல்லாம் தனக்கு நேர்ந்த சில விடயங்களை கூறி தன்னை ஆறுதல் படுத்துவாள். தாயிடம் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் ஒவ்வொரு முறையும் கூறுவது உண்டு. “என்னை ஏனம்மா வேளைக்கு கட்டிக் கொடுத்தனி…நான் அங்கேயே செத்துப்போயிருக்கலாம்…ஏன்தான் உயிரோட இருக்கிறேனோ தெரியலை…” இவ்வாறு கூறம் போது தாயும் தான் விட்ட பிழையை உணர்ந்து அழுவாள். இருந்த போதிலும் புரையோடிப்போன தமிழர் பண்பாட்டு வழக்கத்திற்கு ஏற்ப கணவணுடன் சேர்ந்த வாழ் என்றே தாயும் கூறிக்கொள்வாள். பாமாவிற்கு திருமணப் பேச்சு நடைபெறும் போது தனது தாயிடம் தனது காதலை வெளிப்படுத்திய பின்னர் தாய் தனது மகளின் காதலைச் சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுத்து தோற்றுப்போனாள். தன் கணவனின் பிடிவாத்தினால் பாமாவின் திருமணம் அவசரஅவசரமாய் முடிந்தேறியது. திருமண பதிவு முடிந்தமையினால் அவளாளும் என்ன செய்யமுடியும். தகப்பனும் தன் கடமையை செய்வதாக எண்ணி வெளிநாட்டு சம்பந்தம் என்றபடியால் வயது வித்தியாசம் பாக்காமல் கட்டி அனுப்பிவிட்டார். நாட்டுநிலலைமயும் போர்க்காலச்சூழலும் இத்தகையதொரு முடிவிற்கு இட்டுச்சென்றது. பதினேழு வயிதில் கனடா வந்தபோது தன் கணவன் தன்னை தனது உடல் சுகத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொண்டதை நினைத்து நினைத்து தன்குள்ளேயே அழுது கொள்வாள்.

முதலிரவின் போது தன் சொந்தங்களை, உறவுகளை விட்டு புதிதாய் திருமணமான கணவனுடன் தனித்து, அந்த உறவுகளைப் பிரிந்து வந்திருக்கின்றேமே என அழுதபடி இருந்த அவளை, தன் கணவன் ஆறுதல் படுத்துவான் எனத்தான் நம்பினாள். ஆனால் தனது சுகத்தை அனுபவிப்பதற்கா அவளை அடித்துப்போட்டுவிட்டு தன்னை சுகப்படுத்தியதை நினைத்தால் அவளால் பொறுக்கமுடியாது. “அவனுக்கு என்ன அவ்வளவு கல்மனமே?..” என பாமா எண்ணினாள்! அவள் வாழ்கையை நினைத்தால் அவள் இதயத்தில் ஆயிரமாயிரம் முட்கள் தைத்ததை போன்று எண்ணிக்கொள்வாள். கண்கள் கலங்கி நீரை சொரிந்தன. இதனைத்தான் அவளால் செய்யமுடியும்.

இவ்வாறு ஒரு பெண்ணை குறைந்த வயதில் கட்டிவிட்டோமே என்ற ஆதங்கமும் அவளின் அழகு மீது கொண்ட ஆசையும் விமலுக்கு அவளை வெளியால் நடமாட விட விருப்பமில்லை. பள்ளிக்கூடம் போக மற்றும் வேலைக்காவது போக விட அவள் வாய்விட்டுக் கோட்டும் அவளை அவன் விடவில்லை. இவள் வீட்டில் இருக்கும் போது தனது கணவனுக்கும் கணவனின் சகோதரங்களுக்கும் சமைத்து கொடுப்பாள். பொதுவிடங்களுக்கோ அல்லது உறவினர் வீட்டிற்கோ விருந்திற்கு அழைத்தால் இருவரும் போவதுண்டு. அப்படி போனாலும் அழகா வெளிக்கிட்டு போவது அவருக்குப் பிடிக்காது, அதனை அவரே அவளுக்கு வாய்விட்டு சொல்லியிருக்கின்றான். அவள் அவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு போய்யிருந்தும் அவளை “அழகாகத்தான் இருக்கிறீர்கள்….” என பலபோர் அவளைப்பார்த்து கூறியும் இருக்கின்றனர். இவ்வாறு திருமண புதுவாழ்வு கழிந்து சென்றது. முதல் மூன்று தடவை பிள்ளை தங்கவில்லை. கணவன் மீது உள்ள வெறுப்பினாலும் தன்மீது உள்ள வெறுப்பினாலும் தன் வயிற்றில் தானேயடித்து கருவைக் கலைக்க முயற்சியும் செய்தவள். நான்காவது முறை கர்ப்பமாகி ஓர் ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள். அவளிற்குவிற்கு சின்னப்பிள்ளையில் இருந்து சிறு குழந்தைகள் என்றால் விருப்பம். தான் எடுத்து வளப்பதற்கு ஆசைப்படுவாள். அவளின் ஆசையின் பேரில் ஆண் பிள்ளையை பொற்றெடுத்தாள். தன்னை உடல் சுகத்திற்கு மட்டும் பயன் படுத்துவதை நினைத்து மடைதிறந்த வெள்ளம் போல் கண்களில் நீர் பெருகி வழியும். “சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டவர் தன்னை அரவனைத்து ஆசையாய் வைத்திருந்ததில்லை…”, “வாழ்க்கை என்பது தனி உடல் சுகம் மட்டுமா? அதற்க்கும் அங்கால் எவ்வளவே இருக்கின்றது….என்பதை இவர் ஏன் புரிந்து கொள்ளமாட்டாரா…?” என தனக்குள் ஏங்கிக்கொள்வாள். “பெண்கள் வாழ்வில் ஆடவன் ஒருவன் பிரவேசிக்கும் போதுதான் பெண்ணின் கதையே ஆரம்பிக்கும் போல் இருக்கிறது போலும்….” என நினைத்துக்கொள்வாள். முதல் பிள்ளை பிறந்தபின் தனது தாயின் தேவைக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற காரணத்தினாலும் தனது சுமையை போக்காட்டுவதற்காகவும் அவளிற்கு தனது சிந்தனையை போக்காட்டுவதற்கும் தனது பொழுதைப் போக்கிக் கொள்வதற்கும் ஏதாதவு ஒரு இடத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தாள். Coffe shop இல் வேலை ஒன்றிக்கு சேர்ந்து கொண்டாள். அங்கே வேலைக்குப் போவதற்கு முன் தன் கணவனிடம் அனுமதி பெற்றிருந்தாள், ஆனாலும் அவனின் அரைகுறை மனதின் முடிவாய் வெளிவந்த சம்மதம் திருப்பிதரவில்லை என்றாலும் வேலைக்கு செல்ல முடிவு செய்தாள். தனது கணவனின் குணம் அறிந்து வேலையில் எவருடனும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். இவ்வாறு நாட்கள் கழிந்து போயின.

புதிதான ஒரு நட்பும் பாமாவிற்கு கிடைத்தது. தனது துயரங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்த நட்பை மிகவும் மதித்தாள். தனது நண்பண் தீபனை தனது கணவனுக்கும் அறிமுகம் செய்தாள். நட்பின் பழக்கம் நெருங்க, அவர்களின் நட்பு குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர். இவனுக்காக எதையும் செய்வாள் என்ற அளவிற்கு இருவருக்கும் நட்புறவு பலமானது. பாமாவிற்காக தீபன் எதையும் செய்வான் என்ற அளவிற்கு அவர்களை அறியாத பாசவலை அங்கே இருந்தது. இவர்களின் பழக்கத்தை பொறுக்க முடியாத சக ஊழியர்கள் இவர்கள் இருவருக்கும் தொடர்புபடுத்தி கதைக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்தும் பாமா அவர்களின் போலிப்பேச்சை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தீபன், அந்தப்பேச்சை ஏற்கமுடியாதவனாக இவர்களின் நட்பை விலத்தி வைக்கமுடிவு செய்துவிட்டான். தீபனால் விலத்தி வைத்த பாமாவின் நட்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “மற்றவை என்ன கதைச்சால் என்ன.?...நாங்கள் பழகினது எங்களுக்குத்தான் தொரியும்.?...இதக்கூடவா தீபன் புரிந்து கொள்ளவில்லை?....” என எண்ணி எண்ணி வருத்திக்கொள்வாள். பாசச்சங்கிலித் தொடர் அன்றிலிருந்து அறுந்தது எனலாம். இதனைவிட கணவனின் நண்பர்கள் சிலர் தீபனை அணுகி பாமாவுடனான நட்பை தொடரவேண்டாம் என கண்டித்தும் உள்ளனர். தீபன் பாமாவின் கணவனின் ஆசையின் பேராலும், பாமாவின் நல் எதிர்காலத்திற்கும் தனது நட்பை விலத்தி வைத்தான். இவ்வாறு பாமா வேலை செய்யும் நாட்களில் கணவனின் அன்பு அவளுக்கு கிடைப்து குறைவாகவே இருந்தது.

இவளின் குழந்தையும் வளர்ந்து வந்து கொண்டிருந்தது, இவள் குழந்தை மற்றைய சகோதரங்களின் குழந்தைகளுடன் விளையாடுவதைப்பார்த்து குழந்தையின் ஆசைக்காக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள பாமா ஆசைப்பட்டாள். ஆனால் கணவனிடம் தன் ஆசையை இவளே வாய்விட்டுக் கேட்டும் கணவன் விருப்பம் எதையும் தொரியப்படுத்தவில்லை. ஆனாலும் பாமா வேலை முடிந்து வீட்டைவர பதினொரு மணியாகும். பின்னர் முழுகி தன்னை தாயார் செய்து கொண்டு கணவனிடம் தனது ஆசைகளை வாய்விட்டு கேட்டு கட்டாயப்படுத்தித்தான் தனது மற்றைய பிள்ளைகளை பெற்றாள். இவ்வளவு இழிவாக நடந்து கொண்டதை நினைக்க பாமாவிற்கு “ஏன் இன்னும் உயிருடன்…பாவி நான் இருக்கிறேன்” என அவள் உள்ளம் பதைபதைக்கும். தனியாக அழுது இடிந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்வாள்.

“பெண்ணில் தன்பிறவி கேவலமானது என்று…” பலதடவை எண்ணியிருக்கிறாள். அவளுக்கு கிடைத்த அந்த வாழ்வை எண்ணி அவள் என்ன முடிவிற்கு வருவதென்றே தெரியவில்லை. தனக்கென்ற ஒரு வட்டத்தையிட்டு வாழ்ந்து வந்தாள். அவள் கணவனின் செயல்கள் அவளுக்கு புரிவதே இல்லை. “வீட்டிற்கு உழைத்தல், பணம் சேர்த்தல் மட்டுமா வாழ்கை?..” என பலதடவை தன்னைத்தனே கேட்டு விடையின்றி உள்மனதை சாந்தப்படுத்தி இருக்கின்றாள்.

இவள் கணவனுக்கு வேறொரு ஆணைப்பற்றி கதைத்தால் கட்டிய மனைவி என்று கூடப்பார்க்காமல் “நீ அவனேட போய் படு…..” என பலதடவைகள் சொல்லியிருக்கின்றான். பாமாவிற்கு இவ்வாறான கொடிய வார்த்தைகளைக் கோட்டு பழகிப்போய்விட்டன. “கேவலம் கெட்ட வாழ்க்கை வாழ்பதைவிட சாகாமல் இருக்கிறன்..” எனத்தான் தோன்றும். இப்படித்தான் ஒருமுறை கணவரின் தம்பியின் மகள் மாலினியின் பிறந்ததினத்திற்கு சென்றிருந்தபோது, பாமாவைப்பார்த்து அங்கு வந்திருந்த உறவினர் ஒருவர் “உங்களைப் பார்க்க அப்படியே அம்மன் மாதிரியே இருக்குது….” என்றார். அன்று அவள் உடுத்திருந்தத சிவப்பு நிற சேலை வேறு. இதனை தனது கணவரிடம் விளையாட்டாகத்தான் வாய்விட்டு கூறியிருந்தாள். அதற்கு அவன் “உவங்கள் அப்படித்தான்…முன்னாலே ஒன்று பேசவாங்கள்….பின்னாலே வேறமாதிரிப் பேசுவாங்கள்….இவங்களைப்பற்றி உனக்கென்ன தெரியும்…” என எரிந்து விழுந்தான். பாமாவைப் பொறுத்த மட்டில் உடனுக்குடன் எதையும் கேட்டுவிடும் பழக்கம் உண்டு. “அப்படி யார் என்ன பேசிகினம் அப்பா?....அப்படி என்ன சொன்னவர்கள்.?..” என கணவனிடம் கேட்டாள். ஆனால் அதற்கு கணவன் எதையுமே கூறமறுத்து விட்டான்.

விமலைப்பொறுத்த மட்டில் மனைவியை எப்படியாவது குறை கூறிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். இதனைவிட விமல் தனது மனைவியை வெளியால் போவதென்றால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும் எனவும் கூறிவைத்துள்ளான். அப்படிப்போனால் பாமாவின் தமயனுக்கு விமல், phone பண்ணி பாமாபற்றி தூற்ற ஆரம்பித்துவிடுவான். விமலின் கரைச்சல் தாங்கமுடியாமல் தமயன் பாமாவிற்கு phone பண்ணி என்னநடந்தது என கேட்டு ஆறுதல் கூறுவான். பாமாவின் தமயனுக்கு பாமாபற்றி நன்றாகத் தெரியும். “உன்னை சின்ன வயதில் கட்டிக் கொடுத்ததில் இருந்து ஒரே பிரச்சனையாகவே இருக்குது….என்ன செய்யிறது என்று தெரியலை…” என தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்வான். சில வேளைகளில் பாமா தனது கவலைகளை தன்கணவன் தன்னுடன் நடந்து கொள்ளும் முறைகளையும் முறையிட்டு அழுவாள். பாமாவிற்கு இருக்கிற ஒரே ஆறுதல் தமயன் மட்டுமே. இவ்வளவு மோசமான நிலையிலும் பாமா, “தனது பிள்ளைகளின் எதிர்காலம்தான் முக்கியம்…..அவங்கள் படித்து முடியும் வரையாவது தான் இந்த மண்ணில் வாழ வேண்டியிருக்குது….” என ஆறதல் அடைவாள்.

அவள் வீட்டில் இருக்கும் போது தனது பிள்ளைகளை பாடசாலை கொண்டு சென்று இறக்குவாள், அப்படியே பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் இறக்குவதனால் அவளுக்கு மாதம் நூறு டொலர்கள் கிடைக்கும். அந்தப் பணத்தை கொண்டு தனது தாய்க்கு பணம் அனுப்பிவைப்பாள். கணவரிடம் பணம் கேட்டால் ‘வெந்த புண்ணில வேல் பாய்ச்சிற வேலை..’ என்பதும் அவளுக்குத் தெரியும். சில நாட்கள் பாமாவையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூடச்சொல்லியிருக்கின்றான். “இந்தப்பிள்ளைகள் என்ன பாவம் செய்ததுவள் எங்கடை வயித்தில வந்து பிறக்கிறத்திற்கு..” என எண்ணிவருந்துவாள். இவள் தன்பிரச்சனைகளை வாய்விட்டு சில உறவினருக்கு கூறும்போது அவர்கள் இவளை குடும்பச்சிக்கல் தொடர்பான அலுவலகங்களுக்கு தொடர்பு கொண்டு பேசச் சொல்வார்கள், ஆனால் அதை இவள் விரும்புவதில்லை. இவ்வாறான செய்ற்பாடுகள் மனஅழுத்தத்திற்க காரணமாகவும் அமைய வாய்புண்டு என்பதை சில பெண்களும் அவை தொடர்பான குடும்பப் பின்னனி கொண்ட சிலரும் அறிந்து கொள்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள்தான் உளச்சோர்விற்கு செய்றபட்டு பல குடும்பங்களில் தற்கொலை, மாடியில் இருந்து குதித்தல், கணவன் மனைவி தகறாறுகள் எனப்பெரிதாகி வாய்சண்டைகள் பின்னர் வீதிக்கு வரவைப்பதையும் அறியலாம். இவைகள் சில உளச்சோர்வுப் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன என்பதை சில சமூகப்பிராணிகள் விளங்கிக் கொள்வதில்லை. பாமாவைப் பொறுத்த மட்டில் சில உறவினரின் விண்ணப்பத்தின்கபடி விவாகரத்து எடுத்த வாழ்வதே சிறந்து என ஆலேசனை வழங்குவார்கள். ஆனால், பாமாவினால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் விடயமாக கருதிக் கொள்வாள். தன் வாழ்க்கையில் இவ்வாறான கணவனை தான் அடைந்ததை எண்ணி எண்ணி அழுவதைத்தவிர பாமாவிற்கு வழியெதுவும் தெரியாது. தன்வாழ்வை தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்பணித்து வாழ்வதே சரியென எண்ணி வாழ்கின்றாள். இவள் கதை தொடரும்.....


- முகவன் -

No comments: