Thursday, December 20, 2007

பாரதியும் மேல் நாட்டுக் கவிஞரும்

"பாரதியும் மேல் நாட்டுக் கவிஞரும்"


வாழையடி வாழையென வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலே தானுமொருவனென உரிமை பாராட்டிக் கொண்டவர் பாரதியார். இவர் இளங்கோஇ கம்பன், வள்ளுவன், ஒவை, தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலிய பழந்தமிழ்க்கவிஞர்களையும் பண்டைய வேத முனிவரையும் காளிதாசன் போன்ற வட மொழிக் காவிய கர்த்தாக்களையும், இரவிந்தரநாத்தாகூர் பேன்ற சமகால இந்தியக் கலைஞர்களையும் ஆவர்தோடு சுவைத்தவர்.

திறமான புலமைக்கு எப்பொழுதும் தலைவணக்கம் செய்தவராவார் பாரதியார்.

ஆங்கிலக் கல்வியென்னும் பெயரிலே பேடிக் கல்வியை தனது காலத்து இளைஞர் பெறுகின்றனர் என உள்ளம் நொந்தார். இதனை “சுயசரிதை” என்ற பாடலிலே ஆங்கிலக் கல்வியின் விளைவாக,

செலவு தந்தைக் கோராயிரம் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன
நலமோ ரெடடுணையுங் கண்டிலேனிதை
நாற்பதாயிரம் கோவிலிற் சொல்லுவேன்


என்று ஆவோசத்துடன் பாடினார். இவர் பள்ளிக் கூடங்களிலே அன்று கானப்பட்ட பாடத்திட்டத்தினைக் கூறினாரேயன்றி ஆங்கிலக்கல்வியைன்று. இதற்கு எடுத்துக் காட்டாக

“ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - சுலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”


என்று பாடியுள்ள புலவன் எத்தனையோ மொழிகளிலிருந்து தனக்கு ஊக்கமும் ஆக்கமும் தேடிக் கொண்டான். பாரதியின் கருத்தாக இங்கு வெளிப்படுவது பிற மொழிகளின் காவியங்களிலிருந்து ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் கானவேண்டும் என்பதே.

உதாரணமாக ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரையிலே உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கருத்துக்களையும், அமெரிக்கா பெண்பாற்புலவர் மிஸ் ரீஸ் என்பவர்களது கவிதைகளையும் மனமாரப் போற்றுகின்றார்.

மேற்படியான கவிஞர்களின் கவிதைகளை திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்ய வேண்டும் என்கின்றார். இவை படிப்பவனுடைய அனுபவத்துக்கு ஏத்த வகையிலே அதிலிருந்து நூறு வகையான மறைபொருட்கள் தோன்றுமென்கின்றார்.

இப்படியாக மேல் நாட்டுக் கவிஞர்களைப் புகழ்ந்து வி;ட்டு தமது மொழியை நினைத்துக் கொள்ளும் போது நமக்குள்ளே திருக்குறள் சுட்டிக்காட்டுகின்றார்.

“ கடுகைத் துளைததேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”

என்று கூறியவாஇ; பிற மனத்தோடு ஒரே அடியாக கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று.. எனவும் கூறுகின்றார்.

“ எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு.”

இவ்வாறு எவ்வளவு உயர்ந்த கருத்தாயினும் அதனைத் தனது அளவுகோல் கொண்டு மதிப்பிட்டே ஏற்றார் பாரதியார்.


இந்த அடிப்படையிலேதான் சில மேல்நாட்டுக் கவிஞர்களையும் ஒப்புநோக்கிப்பார்த்தால்...

 பாரதியார் வாழ்ந்த காலத்தில் தமிழகம் தாழ்வுற்றுஇ வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத நாட்டை வாழ்விக்க வேண்டுமென துடித்தவர்.

 அந்த மனநிலையிலே தேசப்பற்று, விடுதலை வேட்கை, புதுமை மோகம் பேன்ற வேட்கை கொண்டவர்களை தேடிச் சென்று பேற்றினார்.

 அந்த வகையிலே அவ்வுணர்ச்சிகொண்;ட மேல் நாட்டுப்புலவர்களை கவர்ந்ததில் வியப்பெதுவுமிருக்காது எனத்தான் கூறவேண்டும் என பேராசிரியர் கைலாசபதியவர்கள் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்

 அந்தவகையிலே பேராசிரியர் பாரதியைக் கவர்ந்த மேனாட்டுப் புலவர்களை தொகுத்துக் காட்டும் போது ஏழு புலவர்களைக் கூறுகின்றார்.

 அமெரிக்காக் கவிஞர் வால்ட் விட்மன்
 பெண்பாற் புலவர் மிஸ் ரீஸ்;
 ஆங்கிலக் கவிஞர்களான
 செல்லி
 பைரன்
 கீட்ஸ்
 வேட்ஸ் வர்த்து
 பேல்ஜியக் கவிஞரான எமில் வெர்~ரேன்.

மேல் நாட்டுக்கலைஞர்கள் பற்றிய விபரம்:

1. அமெரிக்காக் கவிஞர் வால்ட் விட்மன் ( 1819 - 1892 )

 இவர் அமெரிக்காவின் தலையாய சனநாயகக் கவியாவார்.
 இவரைப் பாராட்டாத இலக்கியக் கலைஞர்களே இல்லையென்றே கூறலாம்
 குடியாச்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
 இவர் பிறந்தது லோங்ஜலன்ட் என்னும் இடத்திற்கு அமெரிக்க இந்தியர் இட்ட பெயர் போமாநோக்.

விட்மனுக்கும், பாரதிக்கும் “உள்ளக்கலப்பு” ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

 இருவரின் வாழ்க்கையிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

- இளமையிலே கவித்தாகம்
- ஒழுங்கற்ற கல்வி
- நிலையற்ற சீவியம்
- ஆசிரியத் தொழில் (பத்திரிகைத் தொழில்)
- குமூக அரசியல் வேகம்
- பிரசார முயற்சி
- வேதாந்தப் பற்று விட்மனுக்குஇ பாரதியோ வேதாந்தக் கனி.

இதனால் பாரதி விட்மனை “மகான்” என எழுதியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்கிறார் பேராசிரியர்.

 அமெரிக்காவை கற்பனையிலேயே கண்டுகளித்த விட்மன் “பாரத நாடு” , “பாரத தேசம்” முதலிய பாடல்களைப் பாடிய பாரதியைக் கவர்ந்தார் என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இருக்கின்றன என்கின்றார் போராசிரியர்.
 இதனைப் போல பாரத தேசம் என்னும் பாடலிலே பாரதி
 வெள்ளிப் பனிமலை
 சேது சதுக்கம்
 சிந்து நதி
 சேர நன்னாடு
 சுந்தரத் தெலுங்கு
 சிங்கமராட்டியர்
 ராசபுதனம்


என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போகும் போது விட்மனுடைய செல்வாக்கை தெளிவாகக்கான முடிகின்றது.

 இதனைப் போலவே தாயின் மணிக்கொடி என்ற பாரதியாரின் பாடல் வைகறையிலே கொடிப்பாட்டு ( Song of the Banner at Daybreak) என்ற விட்மனுடைய பாட்டுக்கு இயைபுடையதாகக் கானப்படுகின்றன.

 விட்மனின் சனநாயகப் பாட்டுக்களும் பாரதியைக் கவர்ந்திருக்கும் என்பதில் ஜயமில்லை.

 வசன நடைக்குத் தந்தையே விட்மன் என்கின்ற வகையிலே கவிதை வடிவிலேயும் கவிதையின் பொருளிலும் விட்மன் பாரதியைக் கவர்ந்தார்.

 பெண்மையைப் போற்றுவதிலும் விட்மனும் பாரதியும் கருத்தெற்றுமை உடையவர்கள்.

“ தாயினுஞ் சிறந்ததெதுவுமில்லை எனக் கூறுகின்றேன்” என்றான் விட்மன்.

“ பெற்றதாய் நற்றவ வானினும் நனி சிறந்தவள்” என்பது பாரதியின் வாக்கு.

 மேல் நாட்டுக் கவிஞன் பெண்ணை மிக உயர்வாகப் பேசியது பாரதியைக் கவர்ந்து உற்சாகப் படுத்தியது என்பதில் ஜயமேயில்லை.


பற்பல ஒற்றுமைகள் கானப்படினும் வேற்றுமைகள் என்ற வகையிலே பார்ப்போமானால்

 சனநாயக வாதியாக வாழ்ந்த விட்மன் யாப்பு பழமையின் சின்னமென யாப்பில்லாது எழுதினான்.

 நவீன இலக்கியத்தில் உரைநடைக்கும் செய்யுளுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது என்பது விட்மனின் கொள்கை.

 பாரதியின் கவிதை “வசனக் கவிதை” எழுதியுள்ளானெனிலும் அதனை தலைசிறந்தது என கொள்ளவில்லை.

 பாரதியின் கவிதைகள் வேத கீதங்களை ஊற்றாகக் கொண்டது. அளவோடு பயன்படுத்தப் பட்டது. விட்மனைப் போல கண்மூடித்தனமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் யாப்பை உதறித்தள்ளவில்லை.

 பாரதியார் பழைய பா வகைகளைப் போதியளவு கையாண்டுள்ளார்.

 புதிய செய்யுள்வகைகளைப் பயன்படுத்தி வெற்றி கொண்டானே தவிர யாப்பை ஒரு விலங்காக் கொள்கவில்லை.

 இவைதான் அடிப்படை வேறுபாடுகளாக விட்மனுக்கும் பாரதிக்கும் காணப்படுகின்றது.


பாரதியைப் பெறுத்த வகையிலே “ பாட்டுத்திறத்தினாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும்” என்பது இவரின் செயலாகும்.

இதனால் வண்டிக்காரன் பாட்டிலிருந்து குடுகுடுப்பைக் காரனின் பாட்டுவரை பாடித்தீர்தான்.

ஆனால் விட்மன் தனது செந்த ஆத்ம திருப்திக்காகக் கொண்டான்.

 கவிதை உரைக்கப் பாடுவதற்கன்றி, ஊனக் கண்ணாற் பார்த்து மனத்துக்குள் படித்துச் சிந்திப்பதற்கு என நம்பினான்.

 விஞ்ஞானம், சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் கவிதையிலும் எழுதுதல் வேண்டும் என்பது விட்மனின் கருத்து.

 பாரதியோ நாயன்மாரின் தேவாரங்களிலிருந்து நாடோடிப் பாடல்கள் வரை கட்டமைதியுள்ள யாவற்றையும் தனித்தனியாகப் பரீசீலனை செய்தான்.


இப்படியான செயல்களும் பிற காரணங்களும் பாரதியை விட்மனிலும் சிறந்த உயர்ந்த கவிஞனாகின.

அடுத்து பாரதியினோடு பேராசிரியர் ஒப்பிடுவர் யந்திரப் புரட்சியையும் வளர்ச்சியையும் வரவேற்ற புலவன் எமில் ஹெர்ஹரேன் ( 1855 – 1916 ) என்னும் பெல்ஜிய நாட்டுக் கவிஞர்.


 கவிதைக்கு உரிய பொருள் இனியதும், நல்லதும் என்ற மரபுணர்ச்சியின் காரணமாகக் காற்றையும், வானத்தையும், வயலையும், மதியையும், குளத்தையும், பெண்ணையும், காதலையுமே புலவர்கள் திரும்பத் திரும்பப் பாடிவந்தனர்.

 இந்த நிலையிலேதான் மேற்கு நாகரீகத்தின் விளை பொருள்களான யந்திரங்கள், ஆலைகள், கப்பல்கள் ஆகியவற்றையும் அழகுப் பொருள்களாகக் கொண்டு நகரத்தைப் பாடினார் எமில் ஹெர்ஹரன்.

 அந்த வகையிலே அவர் முன்னோடிதான். இந்த வகையிலே பாரதிக்கு கவிஞரது பொருள் மாற்றம் பிடித்துக் கொண்டது.

 எமில் என்பவரின் கொள்கை யாதெனில்…. “வலமையே அழகு….” ( பக்கம் 225)

“ வலிமை விலிமை என்று பாடுவோம்….”

“ இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யத்திரங்கள் வகுத்திடுவீரே.”

“ ஆயதஞ் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.”


பாரதியார் எட்டையபுரத்திலே இருந்த காலத்திலே செல்லிதாசன் என்பது பாரதியின் இளமைக் காலப் புனை பெயராகவே இருந்தது. “செல்லி கிளப்” ஒன்றுகூட நடாத்தினார் பாரதி.

அடிமை, மிடிமை, மடமை, வறுமை முதலியன என்ன வடிவில் எங்கிருந்தாலும் அவற்றை உடைத்துத் தகர்த்தெறியத் துடித்த அராஜகக் கவிஞன் செல்லி.

பெண்களின் விடுதலையிலும் செல்லியின் ஈடுபாடு இருந்தது.

மனிதன் சுகந்திரப் பிறவியாய் துலங்க வேண்டும் என்பது செல்லியின் கனவு. விடுதலையின் சங்கநாதம் முழங்கவேண்டுமென்று பாடியவன் செல்லி. செல்லியின் தாரக மந்திரம் அதுவாகவே இருந்தது.

பாரதியும் பல இடங்களில் செல்லியின் வாக்கியங்களை உள்வாங்கித் தனதாக்கிக்கிப் பாடியுள்ளார் என்றுதான் கூறத்தேன்றுகின்றது.

எடுத்துக்காட்டுகள்: பக்கம் 227 ( நடுப் பகுதியில் அமைந்திருக்கின்றன)

காவியங்கள் : கட்டறுந்த புரொமத்தியஸ் : ( Prometheus Unbound ) மானிடத்தின் வெற்றியைக் கூறவெழுந்த மகத்தான நவகாவியம். பக்கம்: 228

கற்றாரைக கற்றார் காமுறுபது போல கவியுள்ளம் தனது இனத்தைத் தேடிக் கண்டு கொள்கின்றது. இது இயற்கைதானே என்கின்றார் பேராசிரியர்.

பைரன்: ( 1788 - 1824 )

• இவர் செல்லியின் நண்பர்.

• செல்லியை விட கூடிய சமுதாயப் பற்று கொண்டிருந்தார்.

• அவரது காலத்தில் கானப்பட்ட முரண்பாடுகளையும், கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்த தேசியக் கவி.

• கிரேக் நாட்டின் விடுதலைப் போரின் பங்கு பற்றி அந்நாட்டிலேயே புகழிடம் பெற்றார்.

• பிரபுத்துவக் குடும்பத்திற் பிறந்து சயநாயகவாதியாக மாறறியவன்.

• பார்பனக் குடும்பத்திலே பிறந்து பறையருக்கும், புலையருக்கும் பள்ளுப் பாடிய பாரதிபோல, பைரன் மேற்கத்திய நாகரிகத்தின் கருவூலமாகிய கிரேக்கம தேசம் அந்நிய வசப்பட்டு அதன் புராதனப் பெருமையிழந்து நலிந்திருந்ததைக் கண்டு ஏங்கினான்.

( Don Juan) என்னும் காவியத்தில் வரும் Isles of Greece என்னும் செய்யுட்கள் பண்டை நிகழ்சிகளை மனத்திரையிற் கானும் பாடல்கள். இவை பாரதியின் “எந்தையும் தாயும்” என்று தொடங்கும் பாடல் பெருமளவிற்கு சாயலைப் பெற்றிருக்கின்றது என்கின்றார் பேராசிரியர்.

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையெண்ணி பைரன் பாடிய பாடல்கள் போல பாரதியின் சில பாடல்கள் இருக்கின்றன என்கின்றார் பேராசிரியர்.

அவையாவன:

• எங்கள் தாய்
• பாரத மாதா
• பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி

பைரனின் Child Harold’s Pilgrimage என்னும் நெடும் பாடலிலே இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளைப் பற்றி பைரன் கூறுமிடங்களில் அச்சொற்கள் நீக்கிவிட்டு இந்தியா என்னும் பதத்தை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும் என்பது பேராசிரியர்.

எடுத்துக் காட்டு : “எந்தையும் தாயும்” என்று தொடங்கும் பாடலிலே

கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே

என்பது போன்ற அடிகள் னுழn துரயn என்னும் காவியத்திலே வரும் Isles of Greece “கிரேக்கத் தீவுகள்” என்னும் பாடலிலே

“ கிரேக்கத் தீவுகளே! சஃபோ காதலித்துப் பாடி,
மகிழ்ந்ததும் உம்மீதே… ( பக்கம் 229)


என்று பைரன் பாடும் பாடலில் நேரடியாகக் காணப் படுகின்றது.


ஜேன் கீட்ஸ் ( 1795 – 1821 )

 ஆங்கில ரொமாண்டிக் கவிஞருள் தனி;தன்மை வாய்ந்தன்மை வாய்ந்தன்.

 “ பிரிவுத்துயரின் பிறவிக் கவிஞன்” எனப் பாரட்டப் பெறும் கீட்ஸ் இளங் கவிஞர்களுக்கு நித்திய புருசனாக இருந்திருந்திருக்கின்றார்.

 குறகிய வாழ்நாளிலே ஆழமான வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை வகுத்துக் கொண்டவர் கீட்ஸ்.

 பொதுவாக கீட்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது “ Beauty is truth, truth beauty” என்னும் பாடலடியாகும். Ode on a Grecian urn கிரேக்கத் தாழியொன்றின் மீது இப்பாடலடியைக் கொண்டுள்ளது.

 இக்கோட்பாட்டிற்கு அமைய பாரதி ஞானாதாரம் என்ற வசன காவியத்தில் இக்கோட்பாட்டை எடுத்துக்கூறி விளக்குகின்றார்.

 “ஓர் ஞானி” என்று குறிப்பிடுவது கீட்ஸ்த்தான். ( பக்கம் 231 )

 அழகை ரசிப்பதற்கு பாரதியார் யாரிடமும் பாடங்கற்கத் தேவையில்லை. சத்தியம், சுந்தரம், சிவம் போன்ற கோட்பாட்டை உணர்ச்சி பூர்வமாக தெரிந்திருந்தார்.

 அதீத வறுமை காரணமாகவும் மடமை காரணமாகவும் இந்திய எழுத்தாளரும் கவிஞரும் அழகுத் தத்துவங்களை அடியோடு மறந்திருந்தக் கண்ட பாரதி, அழகுத் தத்துவங்களை ஆணித்தரமாக மேல் நாட்டுக் கவிஞர்களின் காரணமாக இருந்திருக்கின்றனர்.

 இதனை பாரதியார் “கர்மயோகி” பத்திரிகையிலே எழுதியிருக்கின்றார்.
( பக்கம் 231 )

“அழகுத் தெய்வம்” என்ற பாடலும் நினைவுகோரவேண்டியதுவாகும்.

 கீட்ஸ் பாடிய “இராக்குயில் பாட்டு” ( Ode to Nightingale ) பாரதியின் குயிற்பாட்றிற்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கலாமென்பது பலரது அபிப்பிராயம்.

 சொல்லாட்சியிலும் பொருளாட்சியிலும் சில குறிப்பிடத்தக்க உண்மைகளிருக்கின்றன.

“ அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்ததே….” ( பக்கம் 232 )

இது கீட்ஸ் எழுதியவற்றின் நேரடி மொழி பெயர்ப்பே என்று கருதுமளவிற்கு ஒற்றுமையுடையதாகக் காணப்படுகின்றது. இதனை விட கீட்ஸ் எழுதிய குயிற்பாட்டை மட்டுமின்றி அவனது உயிரோவியமான (Endymion) எண்டிமியோனையும் பாரதி படித்திருக்க வேண்டும்.

குயில் கூறுவதைப் போல காதலின் உயர் தத்துவத்தை “ காதலே அழகு, அழகே காதல்” என்பதை கீட்ஸ் பாடிய காவியத்தில் எண்டிமியோன் தனது சகோதரி பிளோனாவிடம் தான் கண்ட அற்புதக் கனவைக் கூறுகின்றான்.

பாரதியும் குயிற்பாட்டிலே கனவிலே கண்ட குயிற்பெண்ணைத் தேடி நிற்கின்றான்.

“ விந்தைச் சிறுகுயிலைக்
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெல்லாம் நோக்கி வந்தேன்..”

எனப் பாடும் பொழுது முற்கூறிய தேடுதல் தெரிகின்றது. இந்த இவ்விருவரின் குயிற்பாட்டின் முடிவொத்த தன்மையிருப்பதைக் காணலாம்

கீட்ஸ் முடிக்கின்றார் :

“மானதக் காட்சியோ, பகற்கனவோ?
கானம் முடிந்நது: நான் விழிப்போ, உறக்கமோ!”

பாரதியார் முடிக்கையில் :

“ சூழ்ந்திருக்கும் பண்டைச்சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம்”


இவைகளைப் பார்கின்றபோது கீட்ஸ்ன் பாடல்கள் பாரதியின் குயிற்பாட்டில் பிரிக்க முடியாத இரண்டறக் கலந்துள்ளன என்று கூறத் தோன்றுகின்றது.

குயிற்பாட்டில் வரும் மாமரத்தோப்பு வெறும் கற்பனையல்ல. (பக்கம் 234)

இதனைப்போலவே வேப்பமரம் என்ற கதையில் ஒரு கனவு கான்கின்றார். வேப்பமரம் கனவிலே கதை சொல்லுகின்றது. இக்கதை முடிவடையும் போது

“ கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தன.” (பக்கம் 234)

மொத்தமாகப் பார்க்கும்போது குயிற்பாட்டின் உருவாக்கத்தில் கீட்ஸ் எழுதிய எண்டிமியோன், இராக் குயில்பாட்டு முதலியனவும் பிறபாடல்களும் பங்கு கொள்கின்றன என்பதை மறுக்க முடியாது. பிற கவிஞரைப் போலவே கீட்ஸ்யும் பாரதி தனதாக்கி தமிழ் மயப்படுத்தி உருமாற்றம் செய்து விடுகின்றான். ஆனாலும் ஒப்பு நோக்கும் போது மூலத்தின் அழுத்தமான சாயல் தெரிகிறது.


டெனிசன் (1809 – 1892)

 சென்ற நூற்றாண்டின் புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞன்.

 ஆங்கில அரசரவைப் புலவராக இருந்தவர்.

 இவரின் நண்பர் இறந்தபோது அவர் பிரிவாற்றாது பாடிய “இன்மெமோரியம்” என்ற இரங்கற் பாக்கோவையைப் பாரதியார் ஈடுபாட்டடன் படித்திருக்கின்றார்.

 துன்பமும் அறியாமையும் நிரம்பிய புத்தாண்டை “போ போ” என்றும் ஆனந்தமும் அறவொளியும் நிரம்பிய புத்தாண்டை “வா வா” என்றும் பாடினார்.

 பாரதி பாடிய “ வலிமையற்ற தோளினாய் போ போ” என்று தொடங்கும் பாடலின் மூலம் இதுவே.


“ நமது பாட்டு மின்னலுடைத்தாக்குக, நமது வாக்கு மின்போலிடித்திடுக” என கூறிய பாரதியை, இருபதாம் நூற்றாண்டின் உலகக் கவிஞருள் ஒருவராக அவர் கற்றுச் சுவைத்துத் தனதாக்கிக்கிய பிறமொழிக் காவியங்களும் உதவின என்பது உண்மை.

செல்லியும் பைரனும் ரொமாண்டிக் கவிஞர்களின் தலைமக்களாவார்.

“ இவ்வாறுதான் கவிப்பொருளும் அமைந்திருத்தல் வேண்டும்” என்ற நேழஉடயளளiஉயட ஏற்பாட்டையெதுர்த்து தனது சமய உணர்வை உரைக் கல்லாக் கொண்டு முனைப்பாகப் பாடியவர்கள்.

பாரதியும் “பொருள் புதிது, சுவை புதிது” என்று தன்முனைப்புடயனேயே பாடியவன். அந்த வகையிலே பாரதிக்கும் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

பாரதியைப் பொறுத்தமட்டில் தன்னுனர்ச்சிக் கவி என்றே கூற வேண்டும்.
பின் நோக்கிப் பார்கின்ற போது பாரதி இன்னுஞ் சிறிது தீவிர வாதியாக இருந்திருந்தால் கூடிய நலன் விளைந்திருக்கும் என்றே தோன்றுகின்றது.

பாரதியையும் மேனாட்டுக் கவிஞர்களையும் ஒப்பு நோக்கும்போது முடிவாக பாரதியின் பலமும் பலவீனமும் தெளிவாகின்றன.

பின் குறிப்பு:

பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நூலில் இருந்து ஒப்படைக்கு எழுதியது. ஒப்பிலக்கியம் என்ற நூல் துணையும் மூலமுமாகின்றது.

No comments: